Sudharshini / 2016 ஜூன் 22 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கியதுடன் மற்றுமொரு சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படும் இளைஞனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பசறை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
'தொழிலின் நிமித்தம் ஹம்பாந்தோட்டையிலிருந்து பசறைக்கு வந்த இளைஞன், அம்பகாலந்த பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியுள்ளதுடன் அவ்வீட்டைச் சேர்ந்த15 வயது சிறுமியுடன் காதல்வயப்பட்டுள்ளார்;. பின்னர், சிறுமியை கடத்திச் சென்று இரு வாரங்களுக்குப் பின்னர் வீட்டுக்கு அழைத்துவந்த இளைஞன், சிறுமிக்கு வயது வந்தப் பிறகு திருமணம் முடித்துகொள்வதாகக் கூறி தொடர்ந்து அவ்வீட்டிலேயே தங்கியுள்ளார்;.
இக்காலப்பகுதியில், அதே கிராமத்திலுள்ள மற்றுமொரு சிறுமியுடன் (வயது 16) காதல் வயப்பட்டு, தற்போது அச்சிறுமியுடன் இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பத்தை அறிந்துகொண்ட ஏற்கனவே கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர், பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் 15 வயது சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி இரண்டுமாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள இருவரையும் கண்டறிவதற்கான நடவடிக்கையில் பசறை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
5 minute ago
30 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
30 minute ago
42 minute ago
46 minute ago