2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

8 வருடங்களுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு கட்டாய இடமாற்றம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிவேல் சுதர்ஷினி

மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் தொடர்ச்சியாக 8 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சர் எம். ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பிலான சுற்றுநிரூபமொன்றை அடுத்த வாரத்துக்குள்  தயாரிக்குமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'குறிப்பிட்ட சில பாடசாலைகளில், சேவைக்காக அன்றி தமது தேவைகளுக்காக ஆசிரியர்களும் அதிபர்களும் தொடர்ந்து 20 வருடங்களாக கடமையாற்றி வருகின்றனர். சிலர் தமது தேவைக்கு ஏற்ப இடமாற்றம் பெற்றுச்செல்லும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்து, முறையான இடமாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .