2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

1,175 பாடசாலைகள் திறக்கப்படுகின்றன

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 200 மாணவர்களுக்குக்
குறைந்த 625 பாடசாலைகளை, இந்த மாதம் 21ஆம் திகதியிலிருந்த திறக்க நடவடிக்கை
எடுத்துள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில், மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும்
சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற பின்னரே,
குறித்த பாடசாலைகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டது என்றார்.

கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு 122 நாள்கள் மாத்திரமே பாடசாலைகள்
திறக்கப்பட்டதுடன், இந்த வருடம் இதுவரை 56 நாள்களே பாடசாலைகள் திறக்கப்பட்டன
என்றார்.

எனவே மாணவர்கள் தொடர்பில் சிந்தித்து பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை
எடுக்குமாறு, ஆசிரியர் மற்றம் அதிபர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அதிபர்- ஆசிரியர்களின் கோரிக்கைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நியாயமான தீர்வை எடுப்பார் என்றார்.

இதேவேளை,கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 200 மாணவர்களுக்கு
குறைந்த 805 பாடசாலைகள் காணப்படுவதாகவும், இதில் 550 பாடசாலைகளின் அதிபர்கள்
21ஆம் திகதி கடமைகளுக்கு சமூகமளிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் அமரசிறி பியதாச தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மத்திய மாகாணத்தின் 13 வலயங்களுக்குரிய 550 பாடசாலைகளை இந்த மாதம்
21ஆம் திகதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலைகளில் அதிபரின்
மேற்பார்வையின் கீழ், சிரமதானப் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதற்காக பெற்றோரும் ஒத்துழைப்பு வழங்குவர் என்றார்.

பாடசாலைகள் திறக்கப்பட்ட சில நாட்களுக்கு கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்காமல்,
மாணவர்களின் உளநல மட்டத்தை ஆராய்ந்த பின்னர், கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது
தொடர்பான வேலைத்திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

கடமைகளுக்குத் திரும்பவதாக இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாத அதிபர்களுள் குறிப்பிடத்தக்களவு அதிபர்கள் கடமைகளுக்கு திரும்புவர் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .