2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

13 கடைகள் முற்றுகை

Super User   / 2013 நவம்பர் 27 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


ஹட்டன் சந்தை பகுதியில் உள்ள 13 கடைகளை இன்று புதன்கிழமை ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் முற்றுகை இட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வர்த்தகர்கள் நடந்து கொள்ளாமையினாலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடை பாதையில் பொருட்களை விற்பதன் காரணத்தால் மக்களுக்கு இடையூராக இருப்பதன் காரணத்தாலேயே  முற்றுகையிட்டோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் வர்த்தகர்கள் நகர சபை தலைவரிடம் கலந்துரையாடி கடைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக வர்த்தகர்கள் கருத்து தெரிவிக்கையில்,

"பஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகளும் இவ்வாறு நடைப்பாதையில் பொருட்களை விற்கிறனர். எனினும் அவர்களுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எங்களுக்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கின்றனர்" என குற்றஞ்சாட்டினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .