2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவர்கள் 18 பேர் கைது

Super User   / 2013 நவம்பர் 25 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சீ.எம்.ரிஃபாத்

கண்டியிலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் 18 பேர் இன்று திங்கட்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்குள் கண்டி வித்தியார்த்த கல்லூரி மற்றும் கண்டி ஶ்ரீசுமங்கல கல்லூரி ஆகியவற்றின் உயர் வகுப்பு மாணவர்கள் இன்று புகுந்து  தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போதே குறித்த 18 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பாடசாலைகளின் உயர் வகுப்பு மாணவர்கள் சிலருக்கு இடையில் சிறிது காலமாக முறுகல் நிலை இருந்து வந்ததுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .