2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மத்திய மாகாணம் கல்வியில் முன்னிலை வகிக்க வேண்டும் - சரத் ஏக்கநாயக்க

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ஜனாதிபதியின் நோக்கத்திற்கேற்ப மத்திய மாகாணத்தில் மூவின மக்களும் எவ்வித வேறுபடுமின்றி வாழந்து வருகின்றனர் என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஹட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழாவின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசி போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'மத்திய மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழந்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின்  இலக்கிய கலாசார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் மத்திய மாகாணத்தமிழ் சாகித்திய விழா இடம்பெற்று வருகின்றது.

இவ்வருடத்திற்கான மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழா ஹட்டனில் இடம்பெறுவதையிட்டு பெருமையடைகின்றேன். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து வருகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும்.

5ஆம் தரப்புலமைப் பரிசில் பரிட்சையில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமது திறமையினை வெளிப்படுத்தியுள்ளனர். மத்திய மாகாணத்தின் தமிழ் ஆசிரியர்கள் மேலதிக
பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

இந்நிலையில் கல்வித்துறையில் அனைத்துச் சமூகங்களும் மத்திய மாகாணத்தில் முதன்மை பெறவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இவ்வாறானதொரு நிலையில் இன்று எமது நாடு சுபீட்சத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாடு பல்துறைகளிலும் முன்னேறி வருகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் இனி வரும் காலங்களில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .