2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தீ விபத்தினால் நோர்வூட் தோட்டக்குடியிருப்பு சேதம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 16 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்தத்தோட்டத்தின் 5ஆம் இலக்க லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தினால் இந்தக் குடியிருப்பைச் சேர்ந்த 6 குடும்பங்களில் 30 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது உறவினர்களின் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவியதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் உடனடியாக தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அவர்களுடன் பொலிஸாரும் இணைந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு அம்பகமுவ பிரதேச சபைத்தலைவர் ஜி.நகுலேஸ்வரன், மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் சென்ஜோன்டிலரி தோட்ட நிருவாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தச்சம்பவம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இந்தத்தோட்டத்தின் லயன் குடியிருப்பொன்று தீவிபத்தினால் சேதத்துக்கு உள்ளாகியமையால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரைகாலமும் தற்காலிகமாகவே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .