2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹஜ்;ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களிள் ஹஜ்ஜுப் பெருநாள் முக்கியம் பெருகின்றது. இது ஹஜ்ஜூப் பெருநாள், ஈதுல் அல்ஹா, தியாகத் திருநாள் எனப் பல பெயர்களால் அழைக்கப் படுகிறது. உலக முஸ்லிம்களைப் பொருத்த மட்டில் நோன்பு பெருநாளை அடுத்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் காலத்தில் இறுதி நாள் ஹஜ்ஜூப் பெரு நாள் வருகிறது.

இவ்விரு பெருநாள்களிலும் காலையில் குளித்து புத்தாடை பூண்டு வாசம் பூசி பள்ளிக்குச் சென்று இறைவனை வழிபடுவர். நோன்புப் பெருநாளில் அதிகம் தர்மம் கொடுப்பதில் ஈடுபடுவர். ஹஜ்ஜூப் பெருநாளன்று தியாகத்தில் கூடுதல் ஈடுபடுவர். இதன் காரணமாக ஹஜ்ஜுப் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது.

இத்தியாத்திற்கு  நீண்டதும் பழைமையானதுமான ஒரு வரலாக்று உண்டு. நபி இப்ராஹிம் (அலை) அவர்கள்  (ஏப்ரஹாம்) தனது மகனான நபி இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்து பலியிடக்கனவு கண்டார். அதன்படி இஸ்மாயில் அவர்களை அறுத்து பலியிடச் சென்ற போதும் அது நிறைவேறவில்லை. காரணம் இறைவன் அவரின் தியாகத்தையே பரிசோதித்தானே தவிர மனித உயிர் ஒன்றைப் பலியிட அவன் நினைத்திருக்க  வில்லை.

அதற்கு ஈடாக ஒரு ஆட்டைப் பலியிடும் படி இறைவன் கட்டளை இட்டான்.
அதன்படி  அன்று முதல் ஒவ்வொரு வருடமும் இன்னிகழ்வை உலக முஸ்லிம்கள் நினைவு கூர்வதுடன் அதற்கு ஏற்ற விதத்தில் உள்கிய்யா கொடுத்து வருகின்றனர்.

இதுபோல் இன்னும் பல சோதனைகளும் தியாகங்களும்  நபி இப்ராகிம் (அலை) அவர்களது வரலாற்றில் இடம் பெறுகிறது. இத்தியாகம் அனைத்ததையும் இணைந்த ஒருவணக்கமாக ஹஜ் கடமையுள்ளது. முஸ்லிம்களின் ஐம் பெறும் கடமைகளுள் ஒன்றாகவும் இந்த ஹஜ் உள்ளது.
 
இவ்வாறான ஹஜ் தினத்தில் பொதுவாக வசதி படைத்த முஸ்லிம்கள் ஒரு ஆட்டை அல்லது மாட்டை குர்பான் செய்து  அதை உணவாக தமக்குள் பங்கிட்டுக்கொள்வர். ஏழைகளுக்கு கொடுப்பர்.

இதனையே உள்ஹிய்யா என்று கூறுவர். சிலர் பலியிடப் படும் மிருகங்களை உணவிற்குப் பயன் படுத்தப் படுவதில்லை. ஆனால் முஸ்லிம்கள் அனுமதிக்கப் பட்ட ஒரு மிருகத்தை (வெள்ளாடு, மாடு, ஒட்டகை, செம்மறியாடு போன்றவை) குர்பான் செய்து  அதன் மாமிசத்தை உணவாகப் பயன் படுத்துவர். ஏழைகளுக்கு விஷேடமாகப் பங்கிடுவர். இதுவே தியாகத்திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளின் வரலாற்றுச் சுருக்கமாகும். 


  Comments - 0

  • zafar muistafa siddiqi Thursday, 18 November 2010 06:16 PM

    eid mubarak

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .