2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தீ விபத்தினால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி

Kogilavani   / 2010 நவம்பர் 18 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )
நோர்வூட் பிரதேசத்திலுள்ள சென்ஜோன் கீழ்ப்பிரிவு தோட்ட குடியிருப்பில் கடந்த 15ஆம் திகதி, திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீயே விபத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்கின்றது.  இத்தீவிபத்தினால் 13 குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்ச, அனுஷியா சிவராஜா பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உடனடி நிவாரணத் தொகையாக பத்தாயிரம் ரூபாவிற்கான காசோலையை 6 குடியிருப்பாளர்களுக்கும் வழங்கினார்.


மேலும் அவர், அடுத்த கட்ட நிவாரண நடவடிக்கையை அமைச்சு மூலம் உடன் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .