Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பிறந்தவுடன் தனது சிசுவை கொன்றதாக சந்தேகிக்கப்படுகின்ற பெண்ணொருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவை, குயினாத் தோட்டத்தைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக பொகவான தோட்ட குடும்பநல மாதுவுக்கும் தோட்டத்தின் சேமநல உத்தியோகஸ்தருக்கும் தகவலொன்று நேற்று 17 ஆம் திகதி காலை கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்குச்சென்று பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது முரண்பாடான பதில்களை வழங்கியுள்ளார்.
அதன் பின்பு அந்த வீட்டில் கதவு மூலையில் துணி ஒன்றினால் மூடப்பட்டிருந்த பொருளொன்றைப் பரிசோதித்த போது பெண்குழந்தை ஒன்று முழு உருவத்துடன் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இதனையடத்து குறித்த பெண்ணை தோட்ட குடும்ப நல மருத்துவ மாதும் தோட்ட சேமநல உத்தியோகஸ்தரும் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியினால் பொகவந்தலாவைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பெண் பெண் பொகவந்தலாவை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சதுன் விதாரணவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இன்று 18ஆம் திகதி பொகவந்தலாவை குயினா தோட்டத்திற்கு விஜயம் செய்த அவர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேந்கொண்டதன் பின்பு சிசுவின் சடலத்தினை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமாறும் குறிப்பிட்ட தாயை ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொகவந்தலாவை பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
குறிப்பிட்ட பெண் திருமணம் முடிக்காதவர் என்றும் இவருக்கு 18 வயதிலும் 14 வயதிலும் இரண்டு பெண்குழந்தைகளும் மூன்று வயதில் ஆண்பிள்ளையொன்றும் உள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே நான்காவதாக பிறந்த பெண் சிசுவை இந்தத்தாய் கொலை செய்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இந்தச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
29 minute ago
2 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
15 Aug 2025