2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கண்டி வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி, கண்டி போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் பயிற்சி வைத்தியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி வைத்தியர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சுமார் 870 வைத்தியர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, கண்டி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு சேவை உட்பட அனைத்து சேவைகளும் 4 மணித்தியாலங்களாக இடைநிறுத்தப்பட்டன.

வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடைபெற்றவேளையில் ஏற்பட்ட விளையாட்டு உத்தியோகத்தரின் மரணத்தையடுத்து, தங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து பல அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். விளையாட்டு உத்தியோகத்தரின் மரணம் தொடர்பில்  வைத்தியர்களைக் குற்றஞ்சாட்டி துண்டுப்பிரசுரங்கள் நகர்ப்பகுதியில் விநியோகிக்கப்பட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பின்னர், வைத்தியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையை அடுத்து, வைத்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.  (JAL)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .