2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜனாதிபதி கண்டிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்  ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இன்று வெள்ளிக்கிழமை காலை பதவியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது கண்டி நகருக்கு விஜயம் செய்துள்ளார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், ஸ்ரீதலாதா மாளிகைக்குச் சென்று புனித தந்தத்தின் ஆஸியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.


இதனையடுத்து, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. உடுகம் ஸ்ரீபுத்தரக்கித தேரர், மல்வத்த பீடாதிபதி வண. திப்படுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் ஆகியோரைச் சந்தித்து  ஜனாதிபதி ஆசி பெறவுள்ளார் . ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு கண்டி நகரில் இன்று மாலை முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .