2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கண்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்ரா குணதிலக தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்ட விசேட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

கடுகன்னாவை பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு அதிகாரி ஒருவரின் உயிரிழப்பு சம்பந்தமாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு  வைத்தியர் ஒருவருக்கு மரண அச்சுத்தல் விடுத்ததன் காரணமாகவே வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .