2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் இரண்டாவது பதவியேற்பையும் முன்னிட்டு வைபவம்

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையும் இரண்டாவது பதவியேற்பையும் முன்னிட்டு இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் மலையக மக்கள் முன்னணியின் அரசியற்துறை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நிக்ழவுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது மத பிரார்த்தனைகளும் வருமானம் குறைந்த 200 குடும்பங்களுக்கு உலர் உணர்வு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. அனைத்து மதத்தலைவர்களுடைய ஆசி உரையுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மலையக மக்கள் முன்னனியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன், செயலாளர் லோரன்ஸ் , ஜனாதிபதியின் இணைப்பாளர் ரூபசிங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜபிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .