2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கம்பளையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 21 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை தெல்பிடிய, ஹிஜ்ராகம பகுதியிலுள்ள 15 வீடுகளில் கொள்ளையிட்ட  நபரொருவரை கம்பளை பொலிஸார் நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிழமை மாலை   கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் திட்டமிட்டு வீடுகளில் கொள்ளையிட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கொள்ளையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றுமொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கம்பளையில் கடுகண்ணாவை வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருந்து கசட், வீடியோ பிளேயர், சமையல் உபகரணங்கள் மற்றும் இலத்திரனியல்  உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் நேற்;றுக் காலை கம்பளை பதில் மஜிஸ்தி;ரேட் ஹுசைன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோது, எதிர்வரும் 2ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .