2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அம்பகமுவ பிரதேச அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 22 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவு உதவிச் செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜினால் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வருடம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பொகவந்தலாவ நகர வடிகால்களை செப்பனிட நான்கு இலட்சம் ரூபாவும் செப்பல்டன் தோட்ட நீர்விநியோக திட்டத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் கவிரவெர கிங்கோரா நீர் விநியோகத் திட்டத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் ஹட்டன் ரொத்தஸ் குடியேற்ற திட்டத்தில் பாதை செப்பனிட இரண்டு இலட்சம் ரூபாவும் நோர்வூட் சின்னதரவல தோட்ட பாதை செப்பனிட ஒரு இலட்சம் ரூபாவும் நோர்வூட் ரொக்வூட் தோட்டப்பாதை அபிவிருத்திக்காக ஒரு இலட்சம் ரூபாவும் டிக்கோயா போடைஸ் தோட்ட முப்பது  ஏக்கர் பிரிவு தோட்டக்கோவிலின் கூரை செப்பனிட 75000 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 54 தோட்டங்களில் சிறிய வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .