2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நெல் விவசாயத்தை கைவிடவேண்டிய நிலை: விவசாயிகள் விசனம்

Kogilavani   / 2010 நவம்பர் 22 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில்  வயல்  விவசாயத்தில் ஈடுபடுபவர்கள்  விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

கண்டி மாவட்டத்தில் பெரும் அளவிலான வயற் காணிகளில் சட்டவிரோதமாக கட்டிடங்கள்  நிர்மானிக்கப்படுகின்றன. பயிர்செய்கையில் ஈடுபடுதவதற்கு போதியளவு  நீர் வசதி  இல்லாமல் உள்ளது.

வயல்களின் ஒரு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தும்போது மற்றைய வயல்களில் நெல் விதைக்க முடியாத நிலை உருவாகின்றது.

இதை தவிர வயல்களுக்கு செல்லும் பாதைகளை  புனரமைக்காமையால்  வயல்களின் இடையில் மாடுகளை செலுத்தவேண்டியுள்ளது. இதனால் பயிர்களுக்கு சேதங்கள் ஏற்படுகின்றன.

இவற்றினால் நெல் விவசாயத்தில் ஈடுபடுவதை கைவிடவேண்டிய நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .