Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 23 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
தரம் ஐந்தில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் சேஸ்டை புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தொண்டராசிரியர் ஒருவரை நோட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய இளம் தொண்டராசிரியரொருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி ஆசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்தத் தொண்டராசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இந்தத் தொண்டராசிரியரால் பாலியல் சில்மிஸத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற ஒன்பது தொடக்கம் பத்து வயது வரை வயதையுடைய ஏழு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவ பரிசோதனைக்குப்பிறகே குறிப்பிட்ட தொண்டராசிரியருக்கெதிராக ஹட்டன் நீதிமன்றத்தின் மூலமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நோட்டன் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
11 minute ago
9 hours ago
15 Aug 2025
Fanam Wednesday, 24 November 2010 05:17 PM
இப்படியானவர்களை அடித்து கொன்றாலும் பாவமில்லை
Reply : 0 0
xlntgson Wednesday, 24 November 2010 10:21 PM
Fanam, நீங்கள் தமிழ் மிரருக்கு புதிது போல் தெரிகிறது, தேடலில் எனது எல்லா கருத்துகளையும் படித்துப் பாருங்கள். புரியும். முதலில் கசைஅடியை ஏற்படுத்தவேண்டும் அதில் இம்மாதிரியான குற்றங்கள் இல்லாமல் போகலா, அப்படி இல்லையென்றால் மரண தண்டனையைப் பற்றி யோசிக்கலாம். இது மக்கள் மன்றம் இங்கிருந்து தான் பாராளுமன்றம் அதன் பின் நீதி மன்றம். ஆகவே உங்களுக்கு அவ்வாறான கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது என்றாலும் சாத்தியக்கூறுகளையும் பார்க்கவேண்டும். நான் அதனால் தான் சிங்கப்பூரைப் போல் ஆரம்பிக்கலாம் என்கிறேன். என்ன?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
9 hours ago
15 Aug 2025