2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொத்மலை ஓயா ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழமலைத் தோட்டத்துக்கு அருகில் கொத்மலை ஓயா ஆற்றிலிருந்து இனந்தெரியாத ஆணொருவரின் சடலத்தினை அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு நேற்று 22ஆம் திகதி காலை கிடைக்கப்பெற்ற தகவலொன்றைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் ஆற்றோரத்தில் கரையொதுங்கிய சடலத்தினை கண்ணுற்றனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க இந்த சடலத்துக்குரியவர் மஞ்சள் நிற டி சேர்ட் அணிந்துள்ளார். இவரின் இடதுகாலின் முழங்கால் பகுதியில் கட்டி ஒன்றும் உள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து அக்கரப்பத்தனை பொலிஸார் நுவரெலியா நீதிமன்றத்துக்கு அறித்தமையைத்தொடர்ந்து இந்த நீதிமன்றத்தின் நீதிவான் யோகராஜன் நேற்று மாலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வருகைத்தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலத்தினை அடையாளம் காண்பதற்காக சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .