2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கார் விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம் தாஹிர்)

வெலிமட பொரலன்த பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தும் அதில் பயணித்த மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளதாக வெலிமட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று இரவு வெலிமட பொரலன்த வீதியில் குருத்தலாவைக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வெளிமட பொரலன்த பகுதியைச் சேர்ந்த சம்பத் (21) ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தவர் ஆவார்.

நேற்று இரவு வெலிமடை பகுதியில் இருந்து பொரலன்ந்த நோக்கி சென்ற கார் வெலிமட பொலலன்ந்த வீதியில் குருத்தலாவை பகுதிக்கு அண்மித்த பகுதியில் வைத்து வீதியில் இருந்த கற்குவியல் ஒன்றில் மோதி பின் அருகே இருந்த மின்சார கம்பமொன்றில் மோதியுள்ளது.

அதன்போது மின்சார கம்பம் உடைந்து காரின் மேல் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெளிமட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .