2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஊவா மாகாண சபை வரவு செலவுத் திட்டம்

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

ஊவா மாகாண சபையின் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று செவ்வாக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய முதல் நாள் அமர்வில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, மின்சாரம், கைத்தொழில், நெசவு கைத்தொழில் அமைச்சின் 2011ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இன்னும் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட அமைச்சுக்கான வாக்கெடுப்பு இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது, ஆளும் தரப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் 20 வாக்குகளும், மலையக மக்கள் முன்னணியின் ஒரு வாக்கும் அடங்களாக 21 வாக்குகள் ஆதரவாக வழங்கப்பட்டு மேற்குறித்த அமைச்சின் 2011 நிதி ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐ.தே.கட்சியின் ஏழு பேரும் ஜே.வி.பி.யின் ஒருவருமாக எட்டு பேர் எதிர் தரப்பில் இருந்தபோதும் அவர்கள் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இன்றைய காலை நிகழ்வை ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அமைச்சின் சார்பில் செந்தில் தொண்டமான் பதிலளித்து உரையாற்றினார்.

எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .