2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பல பிரதேசங்களில் வரி அறவிட அக்குறணை பிரதேசசபை தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேசசபை மேலும் பல பிரதேசங்களில் வரி அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அக்குறணை பிரதேசசபையால் தற்போது வரி அறவிடப்பட்டு வரும் பிரதேசங்களை தவிர, புதிதாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வரி அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அக்குறணை பிரதேசசபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான் தெரிவித்தார்.

இதன்படி, மாத்தளை வீதி, குருந்துகஹஎல வீதி, குடுகலை வீதி, பழைய மாத்தளை வீதி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்து நிலையான சொத்துகளுக்கு நூற்றுக்கு எட்டு சதவீத வரி அறவிடப்படவுள்ளது.

புளுகொஹொதென்னை வீதி, வராகஸ்ஹின்னை வீதி, பள்ளிய கொட்டுவ வீதி, துனுவிலை வீதி, ஹதிரம வீதி, அங்கும்புர வீதி, அத்கால வீதி, மற்றும் தெல்கஸ்கெடை வீதி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அனைத்து நிலையான சொத்துகளுக்கு நூற்றக்கு ஆறு சதவீத வரி அறவிடப்படவுள்ளதாகவும்  பிரதேசசபைத் தலைவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .