2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கம்பளை சாஹிரா கல்லூரியின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 நவம்பர் 26 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை சாஹிரா கல்லூரியின் பெற்றோர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றில் ஈடுபட்டனர்.

கம்பளை சாஹிரா கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள குடியிருப்புக்களுக்கு செல்வோருக்கு பாடசாலை காணியினூடாக பாதை வழங்கக்கூடாது என்று கோரியே பெற்றோர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

கம்பளை சாஹிரா கல்லூரிக்கு அருகில் ஒன்றுகூடிய சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட  பெற்றோர் கம்பளை உடபளாத்த பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் கடிதம் ஒன்றையும் கையளித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .