Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 26 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.தியாகு)
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று நுவரெலியா ஆதார வைத்திய சாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது கருத்துரைத்த அமைச்சர், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டில் நுவரெலியாவிலும், அம்பாந்தோட்டையிலும் புதிய வைத்தியசாலைகள் அமைக்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதென்றும், இதன்படி நெதர்லாந்து நாட்டின் அனுசரனையுடன் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் நிலவி வந்த எக்ஸ்ரே கருவியின் குறைப்பாட்டை அடுத்த வாரம் அக்கருவியை வழங்குவதனூடாக நிவர்த்தி செய்துத் தருவதாகவும் தெரிவித்தார்.
இவ் விஜயத்தின் போது அமைச்சர் நவீன் திசாநாயக்க, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் கித்சிறி அமரதுங்க உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
33 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago
6 hours ago