2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மண் சரிவினால் வீடு சேதம்; போக்குவரத்தும் பாதிப்பு

Super User   / 2010 நவம்பர் 27 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹம்மட் ஆஸிக்)
 
கண்டி கல்ஹின்னை பட்டகொல்லாதெனிய பிரதான வீதியில் நேற்றிரவு பாரிய மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக வீடொன்று பெரும் சேதத்துக்குள்ளானதுடன் அப்பிரதான வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கண்டி, குருணாகல், கொழும்பு மற்றும் மாத்தளை போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் பஸ் வண்டிகளும் நூற்றுக் கனக்கான தனியார் வாகன போக்குவரத்தும் இதனால் தடைப் பட்டுள்ளது.

சேதமடைந்த வீட்டின் உரிமையாளர் எச்.எம்.சஹாப்தீன் மண்சரிவு தொடர்பாக கூறும்போது,

குண்டு ஒன்று வெடிக்கும் சத்தத்துடன் இரவு 11.30 மணியளவில் தனது வீட்டுக்கு மேல் கற்பாறைகள் விழுந்தது. இதனால் தனது வீட்டுக்கு ஏழு இலட்சம் ரூபா அளவிலான நஷ்டம் ஏற்பட்டள்ளதாக கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .