2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மாணவர்களின் சமய அறிவை விருத்தி செய்யப்படும்: மத்திய மாகாண ஆளுநர்

Super User   / 2010 நவம்பர் 27 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

2011ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் உள்ள சகல  பாடசாலைகளிலும் மாணவர்களின் சமய அறிவை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

கம்பளை வலய தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் அதிபர்களுடனான ஆளுநரின் சந்திப்பொன்று கம்பளை சென் ஜோசப் பெண்கள் மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மாணவர்கள் மத்தியில் சமய அறிவை விருத்தி செய்வதன் ஊடாக மனிதநேயமிக்க ஒழுக்கமிக்க சந்ததியொன்றை உருவாக்க முடியும். சகல மதங்களும் நல்லொழுக்கத்தைப் போதிக்கின்றன. நாம் சமயங்களைப் பின்பற்றுவதினூடாக நேர்வழி பெற வேண்டும்.

பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .