2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அரசுக்கு எதிராக பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 நவம்பர் 28 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

நாளாந்த அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பையும், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும் ஐக்கிய தேசிய கட்சி இன்று காலை பண்டாரவளை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் பிரதி அமைச்சர் சச்சிதானந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊவா மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் உபாலி சமரவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் கருப்பு நிற ஆடைகளை அணிந்தும் கருப்பு நிற பட்டிகளை கட்டியும் பதாதைகளையும், கோசங்களையும் எழுப்பினர்.

அரசாங்கம் மக்களுக்கு நாளாந்த பாவனை பொருட்களில் ஏற்படுத்தியுள்ள விலை உயர்வை உடனடியாக குறைக்குமாறும் மக்களை பட்டினியில் போட வேண்டாம் என்றும், பட்ஜட்டில் எங்கே நிவாரணம் என்ற கோசங்களையும், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோசங்களை எழுப்பினர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .