Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 28 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பசறை டெமேரியா தோட்ட கழிவறையிலிருந்து ஆண் குழந்தையொன்று சடலமாக 27ஆம் திகதி காலை மீட்கப்பட்டது.
அதனையடுத்து குறித்த சிசுவை கழிவறையில் போட்ட தாயை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் டெமேரியா தோட்டத்தை சேர்ந்த பரமசோதி (46), என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
குறித்த பெண் கடந்த 26ஆம் திகதி இரவு சிசு ஒன்றை பிரசவித்துள்ளார். அதனையடுத்து குறித்த சிசுவை அருகாமையில் இருந்த கழிவறையொன்றுக்குள் போட்டுள்ளார்.
அதனையடுத்து குருதிபெருக்கு காரணமாக கடுமையான நோய்வாய்கு உட்பட்ட பெண்ணை உறவினர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது குருதி பெருக்குக்கு காரணம் குழந்தையொன்றை குழந்தையொன்றை பிரசுவித்து இருக்கவேண்டும் அதன் காரணமாக குருதிபெருக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென தெரிவித்து உடனடியாக பசறை பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்துள்ளனர்.
பசறை பொலிஸார் 27ஆம் திகதி காலை குறித்த தோட்டத்திற்கு விஜயம் செய்து தேடுதல் மேற்கொண்ட போது கவனிப்பாரற்று கிடந்த மலசலகுழி ஒன்றுக்குள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்து மீட்டனர்.
27ஆம் திகதி மாலை பதுளை நீதிபதி ஸ்தலத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
குறித்த தாய் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்பில் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.
37 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
6 hours ago