2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தோட்ட பாடசாலைகளில் சாரணர் செயற்பாடுகள்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நகர பிரதேச பாடசாலைகளில் செயற்பட்டு வந்த சாரணர் செயற்பாடுகள் தோட்டப் பாடசாலைகளிலும் வளர்ச்சியடைந்து வருவதாக நுவரெலியா மாவட்ட சாரணர் உதவி ஆணையாளர் ஏ.கே.மகேந்திரன் தெரிவித்தார்.


ஹட்டன் எபோட்சிலி தமிழ் வித்தியாலய சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


இப்பாடசாலையை சேர்ந்த 27 சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை விளையாட்டு திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆணையாளர் நந்தசேனவும் கலந்துகொண்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,


பெருந்தோட்ட பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளபோதிலும், சாரணர் செயற்பாடுகளில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவுள்ளது. சாரணர் பற்றிய அறிவும், அதன் நன்மைகளும் மாணவர்கள் மத்தியில் இல்லாமையே இதற்கான காரணமாகும்.


இதனை கருத்திற்கொண்டு பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கும் சாரணர் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியைப் பெற்றுள்ள ஆசிரியர்கள் சுயநலம் பாராது, மாணவர்களின் செயற்பாடுகளில் தம்மை அர்ப்பணித்து சேவை செய்கின்றனர். சாரணர் செயற்பாடுகள் மூலமே மாணவர்களின் ஒழுக்கம், தன்னம்பிக்கை, சகிப்புத்தன்மை போன்ற நற்பழக்கவழக்கங்களை பெறமுடியும்.

எனவே, சகல பாடசாலைகளிலும் சாரணர் குழுக்களை ஆரம்பிப்பதன் மூலம் பெருந்தோட்ட மாணவர்களையும் தேசியமட்ட சாரணர் செயற்பாடுகளில் பற்கேற்கவைக்க முடியும். டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள 8ஆவது தேசிய சாரணர் ஜம்போரியில் பெருந்தோட்ட பாடசாலை சாரணர்களும் பங்கேற்கவுள்ளனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .