Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் டிப்போ ஊழியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இன்று காலை 11.30 மணி வரை மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் கால்நடை ,சமூக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் டிப்போ ஊழியர்களுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து இலங்கை போக்குவரத்து சேவையின் ஹட்டன் டிப்போ பஸ்கள் சேவையில் ஈடுபட்டன.
இதன்போது அமைச்சர் பஸ் டிப்போ நிலையத்துக்கு சென்று ஊழியருடன் கலந்துரையாடிய பின்னர் பஸ் தரிப்பு நிலையத்துக்கு சென்று க.பொ.த.(சாஃத) பரீட்சை எழுதி முடிந்து வீடு செல்லும் மாணவர்களுக்கு விசேட பஸ் ஒழுங்குகளையும் செய்து கொடுத்தார்
ஹட்டன் டிப்போ ஊழியரில் ஒருவர் 13ஆம் திகதி; மாலை ஹட்டன் சுற்று வீதி வழியாக சென்று கொண்டிருந்த போது கடமையில் இருந்த பொலிஸார் அவரை வீதியில் ஒதுங்கி செல்லுமாறு கூறியதையடுத்து இருசாராருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் இவரை கைது செய்து மதுஅருந்தி சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்ததையடுத்து இவரை 14 நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவரை விடுவிக்க கோரியே டிப்போ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியடசகர்களும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025