Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மெனிக்கின்னைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஆபாச இணையத் தளங்களின் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருந்த நால்வரை பொலிஸார் கைதுசெய்து கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்க முன் ஆஜர் செய்த போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 2500 வீதம் ரூ 10000 அபராதம் விதிக்கப் பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆபாச இணையதளங்களையும் அது தொடர்பான காட்சிகளை பதிவிறக்கம் செய்தல், பதிவேற்றம் செய்தல் போன்றவற்றைக் கண்காணிக்கவென அமைக்கப்பட்டுள்ள விஷேட பொலிஸ் பிரிவினர் கண்டிப் பகுதியில் பல்வேறு கணனி திருத்துமிடம் மற்றும் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் என்பவற்றை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதன்போதே மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளை கண்டி பொலிஸார் மேலும் மேற்கொண்டு வருகின்றனர்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025