2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு வேலைவாயப்பு மோசடி : ஒருவர் கைது

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாய்கள்  மோசடி செய்த நபரை  கண்டி பொலிஸின் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர்  கைது செய்துள்ளனர்.

கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் உப தலைவர் சுதத் அஸன்க பண்டார எனும் நபரே இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மேற்படி நபர் கண்டி மாவட்டத்தை சேர்ந்த பல இளைஞர்களிடமிருந்து சுமார் 22 இலட்சம் ரூபா  மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை கண்டி பிரதம நீதவான் லலித் ஏக்கனாயக்க முன் ஆஜர் செய்த போது எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதாவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .