2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை திங்கட்கிழமை ஆரம்பம்

Super User   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இவ்வருடத்திற்கான சிவனொளிபாத மலைக்கான யாத்திரை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவக்காலத்தை ஆரம்பிக்கும் வகையில் இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீபாத இரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன் தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் இரத பவனியாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, அவிசாவளை, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக  சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை நாளை இரவு வந்தடையும்

சமன் தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரதிஸ்டை செய்த பின்பு 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெறவுள்ள விசேட பூஜைகளை தொடர்ந்து இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவக்காலம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை சிவனொளிபாதமலை பிரதேசத்தில் பொலித்தின் பாவனை, மதுபாவனை என்பன இம்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் சிவனொளிபாதமலைக்கு வருகைத்தரவுள்ள  யாத்திரீகர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் பிரிவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகம் இந்த யாத்திரிகர்களுக்காக ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்குவரத்து சேவைகளை நலலத்தண்ணி நகர் வரை நடத்துவதற்கு ஹட்டன் பஸ் டிப்போ வழமை போல் நடவடிக்கை எடுக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .