2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு குந்தகமாக எந்தவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளாது:எஸ்.பி

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு குந்தகமாக எந்தவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை கெலிஓயா கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளனம் நடாத்திய பாராட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முஸ்லிம்கள் மத கலாசார பண்பாடுகளை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள் ஆவர். ஒவ்வொரு சமூகமும் எந்தவொரு சந்தாப்பத்திலும் தமது சமய கலாசார விடயங்கள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருப்பதில் தவறில்லை.

எந்தவொரு மனிதனுக்கும் சமயம் முக்கியமாகும். சமயத்தை கலாசாரத்தை பின்பற்றாத மனிதன் வழி தவறுவது நிச்சயம். எந்தவொரு மதத்தையும் பின்பற்றாத  மனிதன் கூட ஒரு மரத்தையாவது வணங்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .