2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சரத் பொன்சோக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சோக்காவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று சனிக்கிழமை மாலை ஆசீர்வாத பூஜைகளும் மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுனா ரணதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட  மாகாண சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் குழுமிய இவர்கள் மாளிகை வளாகத்தில் விளக்கேற்றி ஆசீர்வாத பூஜைகளையும் நடத்தினர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .