Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கையில் வாழும் அனைவருக்கும் மூன்று மொழிகளையும் கற்பிப்பதற்கு அரசாங்கம் திர்மானித்திருப்பதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.
கண்டி அஹதிய்யா பாடசாலையின் 10 வருட நிறைவை முன்னிட்டு கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நேற்று மாலை இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
இன் நாட்டு முஸ்லிம்கள் அன்று முதல், ஏனைய இனத்தவர்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனக்கும் முஸ்லிம்களுக்கும் கூடிய தொடர்புகள் உண்டு. நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே முஸ்லிம்களுடன் இணைந்தே வாழ்ந்துள்ளேன். முஸ்லிம்கள் மூன்று தலைமுறையாக எனக்கு வாக்களித்து வருகின்றனர்.
எமது பிள்ளைகளுக்கு நாங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய சொத்து கல்வியாகும். முஸ்லிம் பிள்ளைகள் ஆங்கிலத்தை சரளமாக படிக்கின்றனர். அத்துடன் சிங்களத்தையும் தமிழையும் கற்பிப்பது கட்டாயமாகும். ஏன்னென்றால் அவை இரண்டும் எமது நாட்டின் அரச மொழிகளாகும்.
இஸ்லாத்தை முழுமையாக கடை பிடித்தால் வழி தவருவதற்கு இடம் இல்லை. இது ஒரு பூரணமான மார்க்கம். ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையும் இறையடி சேரும் வரையிலும் அனைத்து விடயங்களையும் இஸ்லாம் கற்பிக்கிறது. மற்றைய மார்க்கங்களில் அவ்வாரான விடயங்கள் இல்லை என்றும் அவர் இங்கு கூறினார்.
இந்நிகழ்வில், சுற்றாடல்த்துறை பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர், பாடசாலை அதிபர் ஸகியா மொஹமட் ஆகியோரும் இங்கு உரையாற்றினார்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025