2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வங்கி அட்டையை திருடி பண மோசடி செய்த நபர் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் திருத்துவதற்காக கராஜிற்கு வழங்கப்பட்ட காரிலிருந்த வங்கி அட்டையை திருடி அதன் மூலம் 26000ஆம் ரூபாய் பண மோசடி செய்த  ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் திருடிய வங்கி அட்டை மூலம் பெற்ற பணத்திலிருந்து 8000 ரூபாவை தான் பெற்றிருந்ந கடனை அடைத்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் சந்தேக நபர் இன்று ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .