2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்திலிருந்து பல தடவை தப்பியோடியவர் மீண்டும் கைது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இராணுவத்திலிருந்து பலமுறை தப்பியோடிய 19 வயதுடைய ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இச்சந்தேக நபர் இதற்கு முன்னரும்; பலமுறை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின்; மூலம் இராணுவத்திடம் ஒப்படைப்பட்டிருந்தார். இருப்பினும் இச்சந்தேக நபர் மீண்டும்  தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் மூலம், இவர் இரு சைக்கிள்களை திருடியமை தெரியவந்துள்ளது.

இச்சந்தேக நபரை கண்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸின் குற்றவியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாரானாத் சமரகோன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .