2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் பணம் கொள்ளை

Super User   / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலாங்கொடை நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கிமுனையில் பெருமளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைத்துப்பாக்கியுடன் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த நபர், வர்த்தக நிலைய உரிமையாளரை மிரட்டி பணப்பாதுகாப்புப் பெட்டகத்தை திறக்கச் செய்து, அதிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பத கணக்கிடப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .