2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வங்கி அட்டை மோசடி செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

வங்கி அட்டை ஒன்றினைத் திருடி அதன் மூலம் 26,000 ரூபாவை மோசடி செய்த 18 வயது இளைஞனை கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்க எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைப்பதற்கு உத்தரவிட்டார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த கராஜ் ஒன்றுக்கு பழுது பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த காரினுள் இருந்த வங்கி அட்டையை திருடி அதன் மூலம் 26,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த 18 வயதுடைய ஊழியர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .