2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கண்டியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பிரதமர் பார்வை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பிரதமர் டி.எம்.ஜயரட்ன கண்டி அனிவத்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.   

நேற்று முற்பகல் இடம்பெற்ற இவ் மண்சரிவு காரணமாக 17 பேர் கற்பாறைக்குள் சிக்குண்டுள்ளதுடன்,  அவர்களில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.;

மண்சரிவு இடிபாடுகளுக்குள் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டது. இதில்   புதையுண்டுள்ளவர்களை மீட்கும் பணியில்  இராணுவத்தினர,; பொலிஸார், உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார்.

பிரதேசத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு தகுந்த திட்டமொன்றை முன்வைப்பதாகவும் பிரதமர் இங்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X