2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

Super User   / 2011 ஜனவரி 10 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் விஜயஸ்ரீ ஹேரத் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று 10 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து சீரற்ற காலநிலை காணப்படுவதால் மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படுகின்ற வேளை நாளை மறுதினம் புதன்கிழமை சகல பாடசாலைகளும் திறக்கப்பட வேண்டுமென மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X