2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்: மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமார்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி எவ்வாறு போட்டியிடவுள்ளது என்பது  தொடர்பில் இறுதித் தீர்மானம் இவ்வார இறுதியில் அறிவிக்கப்படுமென்று தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள அம்பகமுவ, நுவரெலியா, வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளிலும் தலவாக்கலை – லிந்துலை நகரசபையிலும் தொழிலாளர் தேசிய சங்கத்தைப்; பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கடந்த முறை உறுப்பினர் பலர் அங்கம் வகித்தனர்.


இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் தலைமையின் கீழ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெறுகின்றன.


இதேவேளை, பதுளை மாவட்டத்திலும்  போட்டியிடுவதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக  தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X