2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சவூதியில் தாக்குதலுக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நாவலையைச் சேர்ந்த பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில்,  மாத்தளை வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலை பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலைப் பிரதேசத்தை சேர்ந்த இப்பெண் கடந்த வருடம் மே மாதம் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு சென்றதாகவும் தான் வேலை செய்த வீட்டில் குழந்தை கீழே விழுந்ததாகக் கூறி வீட்டின் உரிமையாளர் தன்னை தாக்கி அறையில் பூட்டி வைத்ததாகவும் அப்பணிப்பெண் கூறினார்.
ஒரு வாரம் வரை தன்னை அறைக்குள் பூட்டி வைத்த அவர்கள், பின்னர் தன்னை இலங்கைக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் நாவலைப் பொலிஸாரும்  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் விசாரணைகளை நடத்துகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X