2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கைதிகளுக்கு ஹெரோயின் விநியோகித்தவர்கள் கைது

Super User   / 2011 ஜனவரி 12 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி போகம்பறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஹெரோயின் போதை பொருளை வழங்கி கொண்டிருந்ததாக கூறப்படும் இருவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

அக்குறணை நகரில் 12 கிலோ கிராம் ஹெரோயின்; வைத்திருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ததுடன் மற்றுமொரு சந்தேகநபரை கன்னொருவ பிரதேசத்தில் வைத்து 4.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சிறைச்சாலையில் ஒன்றாக இருந்தவர்கள் என்றும் அங்கே ஏற்பட்ட நட்பின் பின் சிறைச்சாலையினுள்ளே உள்ள சகாக்களுக்கு போதைப்பொருள் வழங்கும் வேலையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X