2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மு.கா.விற்கு ஆதரவாக ரங்கா பிரசாரம்

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரஜைகளின் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.ஸ்ரீரங்கா பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மாவட்ட முதன்மை வேட்பாளர் உவைஸ் ஹாஜியரை ஆதரித்து பிரசார கூட்டமொன்று நேற்று சனிக்கிழமை உடுநுவர பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பிரஜைகளின் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்காவும் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவாக பிரசாத்தில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட பலர் கலந்துகொண்டார்.

  Comments - 0

  • sabnameera Sunday, 15 September 2013 03:37 PM

    அரசியலில் இதெல்லாம் சகஜம்பா. நமக்கு எதுக்கு... ஆனால்... நாளை ஒரு நாளில் கிழக்கு மண்ணில் இவங்கள் மட்டும் வோட்டு கேட்டு வரட்டும். எதிரில் இருக்கு மட்டும் கூக்குரல், பங்காளியானால் பொட்டி பாம்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X