2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அநாதரவாக விடப்பட்ட மூன்று சிறுவர்கள் மீட்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பீட்று தோட்டத்தில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் மூன்று சிறுவர்களை அப்பகுதி கிராம உத்தியோகஸ்தர் மீட்டுள்ளார்.

இந்த சிறுவர்கள் நுவரெலியா சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் ஊடாக நுவரெலியா எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

8,10,12 வயது அடங்கிய சிறுவர்கள் மூவரையும் அவர்களது பெற்றோர் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு வேலைக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதவை உடைத்துக் கொண்டு வெளியேவந்த சிறுவர்கள்  சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வீதியில் திரிந்த போதே அவர்களை கிராமசேவகர் மீட்டுள்ளதாக தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .