2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இராவணாகொட பிரதான வீதி சேதம்; போக்குவரத்து அபாயம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதான வீதியாக காணப்படும் இராவணாகொட வீதி புணரமைக்கப்படாமையால் போக்குவரத்து அபாயம் நிலவுகின்றது.

ஹட்டனிலிருந்தும், தலவாக்கலையிலிருந்தும், கொழும்பிலிருந்தும் போகவத்தை வழியாக இராவணாகொட பிரதேசத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பெரமான எனும் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு வீதி சேதமடைந்து மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் இவ்வீதியினூடாக வாகனங்களை செலுத்த முடியாது என வாகன சாரதிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் இவ்வீதியில் மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .