2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளையில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவிருக்கின்ற மூன்று மாகாண சபைத்தேர்தலில் மத்திய மாகாண தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படவிருப்பதாக மாத்தளை மாட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஹேலன் மீஹஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் ஆலோசனைக்கு அமையவே பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படவிருக்கின்றது.

தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை நகர சபை அதிகாரத்திற்குட்பட்ட வாக்களிப்பு நிலையங்களிலேயே இந்த வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .