2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க உறுப்பினர் ஐ.ம.சு.மு.வில் இணைவு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.தியாகு

ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டுள்ளார்.

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்தே அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டதாக நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே தெரிவித்தார்.

இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியகட்சியில் போட்டியிட்டு நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.பின்பு சில காலம் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினராக மறைந்த தலைவர் பெரியசாமி சந்திரசேகரனுடன் இணைந்து செயல்பட்டார்.

2006  ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்  ஐக்கிய தேசியகட்சியில் போட்டியிட்டு நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதோடு பிரதி முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்  ஐக்கிய தேசியகட்சியில் போட்டியிட்டு நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .